BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
பேஸ்புக்கில் காதல்.. சிறுமியை சீரழித்து, ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய காதலன்.. சிறுமிக்கு மற்றொரு பேரதிர்ச்சி.!
17 வயது சிறுமியுடன் முகநூல் வழியே பழக்கத்தை ஏற்படுத்திய திருமணமான வாலிபர், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ காண்பித்து மிரட்டி பணம் பறித்த பயங்கரம் நடந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜு (வயது 21). மும்பையில் எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, பிறந்து சில மாதமே ஆகும் குழந்தை உள்ளது. புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அரசு கல்லூரியில் 17 வயது சிறுமி பயின்று வருகிறார். இவர்கள் இருவருக்கும் முகநூல் வழியே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, தனக்கு திருமணம் ஆகி குழந்தை இருப்பதை மறைத்த ராஜு, சிறுமியிடம் காதல் கவிதை பேசி தனது வலையில் விழவைத்துள்ளார். காதலியை நேரில் சந்திக்க அவ்வப்போது காரைக்காலுக்கும் ராஜு வந்து சென்ற நிலையில், திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும், சிறுமிக்கு தெரியாமல் அவரை ஆபாசமாக படமெடுத்து வைத்துக்கொண்ட நிலையில், கடந்த சில நாட்களாக ராஜு சிறுமியிடம் பேசாமல் இருந்துள்ளார். சிறுமி ராஜு குறித்து விசாரிக்கையில் அவனுக்கு திருமணம் ஆனது தெரியவந்துள்ளது. ராஜுவிடம் இதுதொடர்பாக கேட்டபோது, அவன் தனிமையில் இருந்த புகைப்படத்தை மாணவிக்கு அனுப்பி விட்டு மிரட்டி இருக்கிறான்.
இதனால் பயந்துபோன சிறுமியிடம் பணமும் பறித்த நிலையில், விரக்தியடைந்த சிறுமி காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த காவல் துறையினர், தனிப்படை அமைத்து ராஜூவை மும்பையில் வைத்து கைது செய்தனர். பின்னர், அங்கிருந்து காரைக்கால் அழைத்து வரப்பட்ட ராஜு சிறையில் அடைக்கப்பட்டான்.