இருசக்கர வாகனம் தீப்பிடித்து விபத்து.. விவசாயி உயிருடன் எரித்து கரிக்கட்டையான பரிதாபம்.. அதிர்ச்சி வீடியோ வைரல்.!

இருசக்கர வாகனம் தீப்பிடித்து விபத்து.. விவசாயி உயிருடன் எரித்து கரிக்கட்டையான பரிதாபம்.. அதிர்ச்சி வீடியோ வைரல்.!


pondicherry-famer-died-two-wheeler-fire-accident

வீட்டுக்கு சென்றுகொண்டு இருந்த விவசாயி வாகனம் தீப்பிடித்து இருந்ததில், விவசாயியும் பரிதாபமாக உயிரிழந்தார்.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கரிக்கலாம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் நெல் வியாபாரி வேணுகோபால் (வயது 65). இவர் நேற்று தவளக்குப்பத்தில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டு இருந்துள்ளார். 

அப்போது, வழியில் அபிஷேகப்பாக்கம் பகுதியில் சமாதி பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தார். அச்சமயத்தில், வேணுகோபாலின் இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. 

இதில், உடல் முழுவதும் தீ பரவி மளமளவென எரிந்ததால், வேணுகோபால் நிகழ்விடத்திலேயே தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி காண்போரை பதற வைத்துள்ளது.