7 வயது சிறுமி தனது தந்தையின் மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்; வெளியான அதிர்ச்சி பின்னணி.!

7 வயது சிறுமி தனது தந்தையின் மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்; வெளியான அதிர்ச்சி பின்னணி.!



police-station-complint---children---valoor

கழிவறை கட்டித்தர மறுத்த தனது தந்தையின் மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்த 7 வயது சிறுமிக்கு புதிய வீடு கட்ட உதவித்தொகை வழங்கும் ஆணையை தமிழக அரசு வழங்கியுள்ளது.

வேலூரில் உள்ள ஆம்பூர் நடராஜபுரம் பகுதியை சேர்ந்த சிறுமி ஹனீபாஜாரா. இவர் அங்கு உள்ள பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தனது தந்தையிடம் கழிவறை கட்டி தாருங்கள் என்று பலமுறை கேட்டுள்ளார். காலம் தாழ்த்தி வந்த தனது தந்தையின் செயலை கண்டு மிகவும் மன வருத்தம் அடைந்துள்ளார். ஒரு கட்டத்தில் மிகவும் கோபமடைந்த அவர் தனது தந்தையின் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த சிறுமியின் செயலை வியந்து பாராட்டிய மாவட்ட நிர்வாகம் அந்தச் சிறுமியின் குடும்பத்திற்கு புதிய வீடு கட்ட உதவித்தொகைக்கான ஆணையை வழங்கியது. மேலும் சிறுமியின் சுகாதாரம் மீதான கவனத்தை பாராட்டி ஹனீபாஜாராவை ஆம்பூர் நகராட்சியின் தூய்மை இந்தியா இயக்க தூதுவராக நியமித்தது. child

ஆம்பூரில் நடைபெற்ற தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில், குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடு கட்டிக்கொள்ள அரசு வழங்கும் உதவித் தொகைக்கான ஆணையை சிறுமிக்கு அமைச்சர் கே.சி வீரமணி வழங்கியுள்ளார்.