அந்த டாப் நடிகையின் '50 வினாடி'க்கான சம்பளத்தை பார்த்து, மிரளும் திரையுலகம்.!
மீண்டும் பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரம்: மனைவியையும் குழந்தையையும் வீட்டை விட்டு துரத்திய கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு..!
போடி அருகேயுள்ள டி.சிந்தலைச்சேரியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் அசோக்குமார் (29). அதே பகுதியை சேர்ந்தவர் மெர்சிலின் கிரிஜா (22). இவர்கள் இவருக்கும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அசோக்குமார்-மெர்சிலின் கிரிஜா தம்பதியினருக்குஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், மெர்சிலின் கிரிஜா மீண்டும் கர்ப்பமடைந்துள்ளார். இந்த முறை ஆண் குழந்தை பிறக்கும் என்று அசோக்குமாருக்கு, அவரது குடும்பத்தினரும் எதிர்பார்த்து இருந்துள்ளனர். ஆனால் அவர்களது எதிர்பார்ப்புக்கு மாறாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இதன் காரணமாக தம்பதியினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
மேலும், அகோக்குமார் தனது மனைவியை கொடுமைப்படுத்தி வந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், கடைசியாக நடந்த தகராறில், தனது மனைவியையும், குழந்தையையும் அசோக்குமார் வீட்டை விட்டு வெளியே துரத்தியுள்ளார். இதற்கு அவரது உறவினர்களும் உடந்தையாக இருந்துள்ளனர்.
தன்னையும், குழந்தையையும் வீட்டை விட்டு துரத்தியது குறித்து மெர்சிலின் கிரிஜா, போடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அசோக்குமார், மரியசவரி உள்ளிட்ட அவரது உறவினர்கள் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.