தமிழகம்

சைக்கிள் திருட்டு குறித்து மு.க.ஸ்டாலினுக்கு புகாரளித்த இளைஞர்.! காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை.! சல்யூட் அடிக்கும் இளைஞர்.!

Summary:

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த அர்சத் அஜ்மல் என்பவர் விலையுயர்ந்த சைக்கிள் ஒன்றை வைத்துள்ள

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த அர்சத் அஜ்மல் என்பவர் விலையுயர்ந்த சைக்கிள் ஒன்றை வைத்துள்ளார். அவர் அந்த சைக்கிளில் அவ்வப்போது நண்பர்களுடன் சைக்கிள் பயணம் மேற்கொள்வதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். இந்தநிலையில், கடந்த மாதம் 29-ந் தேதி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த பதிவில் "எனக்கு மிகவும் விருப்பமான என்னுடைய சைக்கிள் மர்ம நபர்களால் திருடப்பட்டுவிட்டது. கண்டுபிடிக்க உதவ வேண்டும். என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் கோரிக்கை விடுத்திருந்தார். மேலும், அந்த பதிவை முதல்வர் மு.க.ஸ்டாலின், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் டேக் செய்திருந்தார்.

மேலும் தனது சைக்கிளை வாலிபர் ஒருவர் திருடும் வீடியோவையும் அஜ்மல் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் அர்சத் அஜ்மலின் சைக்கிள் மீட்கப்பட்டுவிட்டதாகவும், திருடிய நபர் கைது செய்யப்பட்டுவிட்டதாகவும் திருவள்ளூர் காவல்துறை தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. காவல்துறையினர் தமது மிதிவண்டியை கண்டுபிடித்து தந்துள்ளது குறித்து அர்சத் அஜ்மல் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.


Advertisement