"உன் தோஷத்திற்கு பரிகாரம் பண்ணனும்..." கள்ளக்காதலியை கிணற்றில் தள்ளிய போலீஸ்காரர்.!!
தர்மபுரி மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண்ணை கிணற்றில் தள்ளி கொல்ல முயன்ற தனிப்பிரிவு காவலர் கைது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்த கோமதி. 8 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற திருமணத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து வாழ்ந்துள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. தற்போது இவர் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் குடும்பத் தகராறு காரணமாக பாப்பாரப்பட்டி காவல் நிலையத்திற்கு புகாரளிக்க சென்றபோது அங்கிருந்த தனிப்பிரிவு காவலர் ராஜாராமுடன் பேச்சுவார்த்தை ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் இருவரும் திருமணம் கடந்த உறவில் இருந்துள்ளனர்.
இதையும் படிங்க: "ஜெயிலுக்கு போனா அவன் கூட போயிடுவியா..." கொலையில் முடிந்த கள்ளக்காதல்.!! பழ வியாபாரி கைது.!!
இந்நிலையில் ராஜாராம் வெண்ணாம்பட்டி பகுதியில் கோமதியை வீடெடுத்து தங்க வைத்துள்ளார். இந்த தகவல் ராஜாராமின் குடும்பத்திற்கு தெரிய வந்ததும் பெரிய தகராறு வெடித்தது. இதனால் கோமதியை பார்ப்பதை ராஜாராம் தவிர்த்து வந்துள்ளார். இது இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட காரணமாக இருந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராஜாராம் கோமதியை கொலை செய்ய முடிவு செய்தார்.

இதன்படி ஜாதகத்தில் தோஷமிருப்பதால் இருவருக்கும் சண்டை ஏற்படுவதாக கூறி, இதை தடுக்க பரிகாரம் செய்ய வேண்டுமென தர்மபுரி பெருமாள் கோவிலுக்கு அழைத்துச் சென்று அங்குள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்க செல்லுமாறு கோமதியை அனுப்பி வைத்து அங்கிருந்து கிணற்றில் தள்ளி விட்டுள்ளார். தண்ணீரில் விழுந்த கோமதி அங்கிருந்த கல்லை பிடித்துக் கொண்டு தப்பித்தார். இவர் கூச்சலிடவே அப்பகுதி மக்கள் கோமதியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து கோமதி அளித்த புகாரில், அதியமான் கோட்டை போலீசார் விசாரணை நடத்தி காவலர் ராஜாராமை திங்கள்கிழமை கைது செய்தனர். திருமணம் கடந்த உறவால் ஏற்பட்ட விளைவின் காரணமாக ராஜாராம் தனது வாழ்க்கையை தானே எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "வயதில் மூத்த பெண்ணுடன் கள்ளக்காதல்..." நிதி நிறுவன ஊழியரின் விபரீத செயல்.!! போலீஸ் நடவடிக்கை.!!