அலட்சியத்தால் சோகம்.. ஓடும் பேருந்தில் ஏற முயற்சித்த மாணவனுக்கு நேர்ந்த துயரம்.. நெஞ்சை உலுக்கும் பரிதாபம்.!

அலட்சியத்தால் சோகம்.. ஓடும் பேருந்தில் ஏற முயற்சித்த மாணவனுக்கு நேர்ந்த துயரம்.. நெஞ்சை உலுக்கும் பரிதாபம்.!


Police investigated chennai school student bus accident

ஓடும் பேருந்தில் ஏற முயற்சித்த மாணவனின் மீது பேருந்து சக்கரம் ஏறி இறங்கி விபத்திற்குள்ளாகியது. 

சென்னையில் உள்ள பள்ளிக்கரணை காவல் நிலையம் எதிரே, தாம்பரத்திலிருந்து அடையாறு செல்லும் 99 தடம் எண் கொண்ட பேருந்து பயணம் செய்தது. 

இந்த பேருந்து பள்ளிக்கரணை காவல் நிலையம் அருகே செல்கையில், ஓடும் பேருந்தில் பள்ளி மாணவன் ஆர்யா ஏற முயற்சித்துள்ளார். அப்போது அவர் நிலைதடுமாறி கீழே விழவே, அவரின் மீது பேருந்து சக்கரம் ஏறியுள்ளது. 

chennai

இந்த விபத்தில் ஆர்யாவின் இடுப்பு மற்றும் கால் பகுதியில் பேருந்தின் சக்கரம் ஏறியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்து அலறித்துடித்த மாணவனை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.