தமிழகம்

அழகான மனைவி, 5 கோடி ரூபாய் சொத்து..! இரண்டையும் ஆட்டைய போட்டுட்டாரு.! புலம்பும் கணவன்.

Summary:

Police had illegal relationship with girl

சென்னையை சேர்ந்தவர் ஜனார்தனன். இவரது மனைவி பெயர் நர்மதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சவுதியில் வேலைபார்த்துவந்த ஜனார்த்தனன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இங்கு வந்து பார்த்தபோதுதான் தனது மனைவி நர்மதாவுக்கும், திருநின்றவூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜேஷ் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் வந்த ஜனார்த்தனன் ஒரு பரபரப்பு புகாரை கூறியுள்ளார். அதில், தனது மனைவி நர்மதாவுக்கும் திருநின்றவூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜேஷ் என்பவருக்கும், தவறான உறவு இருப்பதாகவும், அதை தட்டி கேட்டால் ராஜேஷ் தன்னை கொன்றுவிடுவதாக மிரட்டுவதாக கூறியுள்ளார்.

மேலும், கடந்த வாரம் எனது மனைவியும், உதவி ஆய்வாளர் ராஜேஷும் தனிமையில் சந்தித்தபோது தான் அவர்களை பின் தொடர்ந்து புகைப்படம் எடுத்ததாகவும், இதனை பார்த்துவிட உதவி ஆய்வாளர் ராஜேஷ் தன்னை கடுமையாக தாக்கியதாகவும் ஜனார்த்தனன் கூறியுள்ளார்.

அதுமட்டும் இல்லாமல், தனது குழந்தைகள் பெயரில் வாங்கிய 5 கோடி ரூபாய் சொத்துக்களை எனது மனைவியின் உதவியோடு உதவி ஆய்வாளர் ராஜேஷ் அபகரிக்க முயல்வதாகவும் ஜனார்த்தனன் சென்னை காவல் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார்.


Advertisement