திருச்சியில் அதிர்ச்சி... மது குடிக்க பணமில்லாததால் குழந்தையை விற்ற தந்தை.!! 4 பேர் மீது வழக்கு பதிவு.!!



police-arrested-a-man-for-selling-daughter-to-buy-liquo

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மது குடிக்க பணமில்லாததால் குழந்தையை விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக குழந்தையின் தந்தை உட்பட 4 பேரை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் அரியமங்கலம் அருகே ரவிக்குமார் என்பவர் வாழ்ந்து வருகிறார். மது பழக்கத்திற்கு அடிமையான இவர் தினமும் குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் மது குடிக்க பணமில்லாததால் தனது 3 வயது மகளை 30.000/- ரூபாய்க்கு ஒரு தம்பதியிடம் விற்பனை செய்துள்ளார்.

Tamilnadsu

இது தொடர்பாக குழந்தையின் தாய் அரியமங்கலம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் ரவிக்குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் குழந்தையை விற்பதற்கு புரோக்கராக செயல்பட்ட சாகுல் என்ற நபரையும் கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: திருச்சியில் அதிர்ச்சி... 17 வயது சிறுமி கர்ப்பம்.!! கல்லூரி மாணவர் கைது.!!

மேலும் இந்த சம்பவத்தில் சட்டவிரோதமாக குழந்தையை வாங்கிய தம்பதியும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து குழந்தையும் மீட்கப்பட்டுள்ளது. குடிக்க பணம் இல்லாததால் குழந்தையை விற்ற சம்பவம் திருச்சி பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: "பிஞ்சு குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்..." பெற்ற பிள்ளைக்கு பாலியல் தொல்லை.!! தந்தை மீது போக்சோ வழக்கு.!!