த்ரிஷா புடவையில் விஜயின் கட்சி கொடி.. பிரபல தயாரிப்பாளர் சரமாரி கேள்வி?
சென்னையில் போலீசாரையும் விட்டுவைக்காத கொரோனா! அதிர்ச்சி தகவல்!
சென்னை நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஏட்டு உள்பட 2 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் கயிறுகளை கட்டி தடை ஏற்படுத்தப்பட்டது.
சென்னையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, பல்வேறு நடவடிக்கைகளை, காவல் துறையினர் எடுத்து வருகின்றனர். இதில், தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு, கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, கொரோனா பாதிக்கப்பட்ட பகுதியில் பணிபுரியும் போலீசார் அனைவரும், அருகில் உள்ள கொரோனா சிறப்பு மையத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. இந்தநிலையில், சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் அதே காவல் நிலைய கட்டுப்பாட்டு பகுதியில் பணியாற்றி வரும் மாநில உளவுப்பிரிவை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அவர்கள் பணியாற்றி வந்த காவல் நிலையம் அமைந்துள்ள கட்டிடம் கிருமி நாசினி தெளித்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் ஊரடங்கை முழுமையாக கடைபிடித்தால் மட்டுமே முழுமையாக கொரோனவை விரட்ட முடியும் என தன்னார்வலர்கள் கூறுகின்றனர்.