தமிழகம்

ஒன்றாக சீட்டு விளையாடிய 13 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று!

Summary:

playing cards people affectted by corona

தமிழகத்திலே சென்னையில் தான் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதேபோல் உயிரிழப்பும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சென்னையில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,937 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் பலியானவர்களின் எண்ணிக்கை 260 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனா பரவலின் எண்ணிக்கை மிக குறைவாக இருந்தது. ஆனால் பலர் சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு செல்வதால் வெளியூர்களிலும் கொரோனா பரவல் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது.

சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 1477 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தியாகராய நகர் தர்ம்புரம் பகுதியில் ஒன்றாக அமர்ந்து சீட்டு விளையாடிய 13 பேருக்கு இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்தப்பகுதியில் ஏற்கனவே 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement