இண்டிகோ விமானத்தின் மீது டிராக்டர் மோதி விபத்து...விமான சேவைகள் ரத்து...

இண்டிகோ விமானத்தின் மீது டிராக்டர் மோதி விபத்து...விமான சேவைகள் ரத்து...


plane-damaged-by-tractor- in Chennai airport

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை ஏற்றி சென்ற டிராக்டரானது இண்டிகோ விமானத்தில் நேராக சென்று மோதி விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் விமானம் சேதமடைந்துள்ளது . இதன் காரணமாக திருச்சிக்கான 24 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து இண்டிகோ நிறுவனம் கூறுகையில் பயணிகளின் உடைமைகளை எடுத்து செல்லும் போது எதிர்பாராத விதமாக டிராக்டரானது விமானத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் சென்னையில் இருந்து திருச்சி வரை செல்லும் இண்டிகோ விமானத்தின் 24 சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சேதமடைந்த விமானம் சரி செய்யப்பட்டு வருகின்ற 22 ஆம் தேதி முதல் மீண்டும் விமான சேவை தொடங்கும் என தெரிவித்துள்ளது.

chennai airport

மேலும் பயணிகள் செலுத்திய பணமும் திரும்ப தரப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் இந்த விபத்து குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.