BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
சயின்ஸ் லேபில்... 8ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் துன்புறுத்தல்.! கடும் நடவடிக்கைகள்.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இயற்பியல் ஆசிரியர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகிறது காவல்துறை.
கன்னியாகுமரி மாவட்ட தலைநகரான நாகர்கோவிலை அடுத்துள்ள கண்ணாட்டுவிளை என்ற ஊரிலிருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் அருண் ஜீவன்(47). அதே பள்ளியில் ஆலங்கோடு பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி மாணவன் கழிவறைக்கு சென்று விட்டு திரும்பும் போது அவனிடம் லாபகமாக பேசிக் கொடுத்த இயற்பியல் ஆசிரியர் அந்த மாணவனை அறிவியல் ஆய்வகத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்திருக்கிறார். இதில் மாணவனின் பிறப்புறுப்பில் காயம் ஏற்பட்டிருக்கிறது. வலியால் துடித்த அந்த சிறுவன் இது தொடர்பாக தனது தந்தையிடம் கூறியிருக்கிறான்.
அவனது தந்தை பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரிடம் புகார் கொடுத்துள்ளார். ஆனாலும் ஆசிரியர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து பள்ளிக்கு வந்த காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது ஆசிரியர் அருண் ஜீவன் பள்ளியில் இருந்து தலைமறைவாகி விட்டார். இதனால் அவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வருகிறது காவல்துறை.