தற்கொலை கடிதம் எழுதி வைத்து விட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை... பேராசிரியரிடம் போலீசார் விசாரணை!!



Pg student committed suicide in kumari district

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றில் தூத்துக்குடியை சேர்ந்த சுகிர்தா என்ற முதுகலை (எம்.டி) இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென அந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டதில் சுகிர்தாவின் தற்கொலை கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் கல்லூரி பேராசிரியர் பரமசிவம், சுகிர்தாவிற்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகவும், மருத்துவ மாணவர்கள் ப்ரீத்தி, ஹரீஷ் ஆகியோர் மனரீதியாக தொல்லை தந்ததாகவும் எழுதப்பட்டிருந்தது. அதனை வைத்து போலீசார் மூன்று பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Kanniya kumari

மேலும் அந்த மூன்று பேரின் மீதும் கல்லூரி நிர்வாகம் விசாரணை முடியும் வரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.