பெட்ரோல் டீசல் விலை உச்சகட்ட உயர்வு.! பேரதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்.!

பெட்ரோல் டீசல் விலை உச்சகட்ட உயர்வு.! பேரதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்.!


petrol-diesel-price-increased-cskgzw

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்றவாறு இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து கொள்கின்றன. ஆரம்பத்தில் பெட்ரோல், டீசல் விலை மாதத்திற்கு இரண்டுமுறை மட்டும் மாற்றி அமைக்கும் முறை செயல்படுத்தப்பட்டு வந்தது. இது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கைவிடப்பட்டது. 

அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைப்பிடித்து வருகிறது. கொரோனா சமயத்தில் நாடு முழுவதும் கடும் நிதிச்சுமை ஏற்பட்ட  நிலையில், பெட்ரோல் விலை உயர்ந்துகொண்டிருந்தது. இதனையடுத்து நீண்ட நாட்களாக பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் விற்கப்பட்டு வந்தது.

petrol

ஆனால், கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 26 காசுகள் அதிகரித்து ரூ.89.96-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 24 காசுகள் அதிகரித்து ரூ.82.90-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.