ரிலீசுக்கு முன்பே கோடிகளை அள்ளும் தனுஷின் 'கேப்டன் மில்லர்'.!
தொடர்ந்து 6-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு! முக்கிய காரணம் இதுதான்!
தொடர்ந்து 6-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு! முக்கிய காரணம் இதுதான்!

ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே, அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், ஈரானின் 2-வது சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதன் காரணமாக அமெரிக்கா - ஈரான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது
அவர் கொல்லப்பட்ட தினத்தில் கச்சா எண்ணெய் விலை 3 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்தது. இதனால் தற்போது இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. பெட்ரோல் டீசல் விலை தொடர் ஏற்றத்தால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 05 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.78.69ஆக விற்கப்படுகிறது. அதேபோல் டீசல் விலையும் 11 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.72.69 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது.