24.08.2021 - மீண்டும் குறைந்த பெட்ரோல் விலை.! மகிழ்ச்சியில் பொதுமக்கள்.!

24.08.2021 - மீண்டும் குறைந்த பெட்ரோல் விலை.! மகிழ்ச்சியில் பொதுமக்கள்.!


petrol diesel price decreased


சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்றவாறு இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதம் இரு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்து வந்தது. 

ஆனால் தற்போது பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைப்பிடித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை தினசரி விலை நிர்ணயம் என்ற நடைமுறை வந்ததில் இருந்து பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அதன் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்து உச்சகட்டத்தை அடைந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய்  100ஐ தாண்டி பொதுமக்களை அதிர்ச்சியடையவைத்தது.

petrolஇந்நிலையில், கடந்த 13ஆம் தேதி தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் மாநிலத்தில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அன்று இரவு முதலே அது நடைமுறைக்கு வந்தது. இதனால் தமிழக மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து பெட்ரோல், டீசல் விலையில் தொடர்ந்து மாற்றம் இல்லாமல் இருந்து வந்த நிலையில், ஒரு வாரத்துக்கு பின், தற்போது எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை குறைத்திருக்கின்றன. சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.32-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் நேற்று டீசல் லிட்டருக்கு ரூ.93.66-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்துள்ளது. இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் குறைந்து ரூ. 99.20-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 14 காசுகள் குறைந்து ரூ. 93.52-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.