தமிழகம்

பேக்கரிகள் இயங்க அனுமதி! தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு!

Summary:

Permission allowed for bakeries in tamilnadu

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் ஏராளமான நாடுகளில் பெருமளவில் பரவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனோவால் இதுவரை 1075 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

 இந்நிலையில் நோயை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் நாளுக்கு நாள் அதிகரித்து,  கொரோனா கட்டுக்குள் வராத நிலையில் தற்போது தமிழகத்தில் ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேறக் கூடாது எனவும், சமூக விலகலை பின்பற்றவேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது. மேலும் ஊரடங்கில் மளிகை பொருட்கள், காய்கறிகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை கால நிபந்தனைகளுடன் விற்க   அனுமதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் தற்போது பேக்கரிகள் தடையின்றி இயங்க அனுமதியளித்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி  பேக்கரிகள் காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரை இயங்கலாம். மேலும் பேக்கரிகளில் யாரும் அமர்ந்து உண்ணக்கூடாது. பார்சல் மட்டும் வாங்கி செல்லலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


Advertisement