#பெரம்பலூர் : லஞ்சம் வாங்கிய பில் கலெக்டருக்கு ஆப்பு.! அதிரடி காட்டிய அதிகாரிகள்.!

பெரம்பலூர் மாவட்டத்தின் ஆலம்பாடி சாலையில் வேல்முருகன் என்பவர் புது வீடு ஒன்றை கட்டி வருகின்றார். இந்த வீட்டிற்கு அவரது நண்பரும், ஒப்பந்தக்காரருமான சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் கட்டிடப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த வீட்டிற்கு நகராட்சியின் மூலம் வரி ரசீது போட பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் இருக்கும் வரி வசூல் மையத்தில் சுபாஷ் சந்திரபோஸ் சென்று பில் கலெக்டர் சிவகுமாரிடம் கேட்டுள்ளார். அப்போது, சிவகுமார் இந்த ரசீதை போட 25 ஆயிரம் லஞ்சம் வேண்டுமென கேட்டுள்ளார். தொடர்ந்து வீட்டு உரிமையாளர் வேல்முருகனிடம் இது குறித்து தெரிவிக்கப்பட்ட நிலையில் வேல்முருகன் மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் இருவரும் சேர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
இந்த தகவலின் பெயரில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஹேமச்சந்திரா தலைமையில் எஸ்ஐ சுந்தரமூர்த்தி மற்றும் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி ஆகியோர் அடங்கிய லஞ்ச ஒழிப்பு போலீசார் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். அதன்படி, சிவகுமாரிடம் ரசாயனம் தடவிய நோட்டுகளை கொடுக்க சொல்லியுள்ளனர்.
இதையும் படிங்க: கணவன் - மனைவி சண்டையில் கொலை.. தடுக்க வந்த மகளும் படுகாயம்.. தந்தை வெறிச்செயல்.!
தொடர்ந்து, ராம் என்ற இடைத்தரகர் மூலமாக சிவக்குமார் பணத்தை பெற்றுள்ளார். அந்த சமயத்தில் அங்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மறைந்து இருந்து அந்த நோட்டுகளை பறிமுதல் செய்து குற்றவாளியான சிவகுமார் மற்றும் இடைத்தரகரான ராம் இருவரையும் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: பெரம்பலூர்: எக்ஸ்.எல் வாகனத்தில் 6 பேர் பயணம்.. நடந்த கோர விபத்து.. சிறுவன் பலி., 5 பேர் படுகாயம்.!