உண்மையாலுமே கமல் வெற்றிதாங்க..! பார்த்திபன் என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.?

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தமிழகத


parthiban talk about kamal

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தமிழகத்தில் இதுவரை எண்ணப்பட்ட முடிவுகளின்படி ஆரம்பத்தில் இருந்தே திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வந்த நிலையில், திமுக 158 இடங்களில் முன்னிலையிலும், அதிமுக 76 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. 

பலரும் எதிர்பார்க்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் காலையில் இருந்து முன்னிலை வகித்து வந்தார். ஆனாலும் கடைசி கட்டங்களில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்தநிலையில், நடிகர் பார்த்திபன் அவரது ட்விட்டர் பக்கத்தில், திரு கமல் அவர்களின் வெற்றி என்பது.... வெற்றி தோல்வி-எண்ணிக்கையில் இல்லாமல், தன்னம்பிக்கையில் மக்களுக்காக உழைக்க முன்வந்து, அரசியல் க(ள்)ளம் அறிந்தப் பின்(னும்) வாங்காமல்,வெல்வதற்கு கூட்டு பொரியல் ஏதும் வைக்காமல் பேராண்மையுடன் நின்றதே” என பதிவிட்டுள்ளார்.