அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கும் வேட்பாளர் யார் தெரியுமா?

அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கும் வேட்பாளர் யார் தெரியுமா?



Parivendhar in perambalur 3 lakhs vote difference

நாடாளுமன்ற தேர்தல் சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்ததை அடுத்து இன்று வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்துவருகிறது. தற்போதைய நிலவரப்படி மத்தியில் ஆளும் கட்சியான பாஜக அதிக இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சி அமைக்க தயாராகி வருகிறது.

இந்தமுறை பெரிதும் எதிர்பார்க்கப்ட்ட காங்கிரஸ் கட்சி பின்தங்கியே உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி கட்சிகள் அதிக வாக்கு பெற்று பெரும்பாலான இடங்களில் முன்னிலையில் உள்ளது. தேனியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓபிஎஸ்-ன் மகன் ஓ.பி. ரவிந்திரநாத் 1,01,891 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

Election 2019

இந்நிலையில் பெரம்பலூர் மக்களவை தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் அதன் தலைவர் பாரிவேந்தர் போட்டியிட்டார். அவர் தற்போது வரையில் 4,76,286 வாக்குகளை பெற்றுள்ளார். அவரை எதிர்த்து அதிமுக தரப்பில் போட்டியிடும் சிவபதி 1,98,173 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

இவர்கள் இருவருக்கும் கிட்டத்தட்ட 2.79 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளது.தற்போதைய நிலவரப்படி பாரிவேந்தர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.