தமிழகம்

குடும்ப தகராறு காரணமாக 2 வருடங்களுக்கு முன்பு மாயமான தம்பதிகள்!! திடீரென வந்த செல்போன் அழைப்பால் கண்ணீர் விட்ட பெற்றோர்!

Summary:

parents crying for their daughter phone call


திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடி பகுதியை சேர்ந்தவர் காஜாமைதீன் சென்னையில் வேலைபார்த்துவந்த இவர், நான்கு வருடங்களுக்கு முன்பு நிஷா என்ற பெண்ணை  திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதியினருக்கு 4 வயதில் மகன் இருக்கிறான். 2 வருடங்களுக்கு முன்பு தன்னுடைய மனைவி மற்றும் மகனை காஜாமைதீன் சென்னைக்கு அழைத்துசென்றுள்ளார். அவர்கள் சென்னை சென்றதிலிருந்து குடும்பத்தினருடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்துள்ளனர். இதனையடுத்து நிஷாவின் பெற்றோர் தன் மகள் குடும்பத்தை பற்றிய தகவல் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

தொடர்புடைய படம்

இதனையடுத்து இதுபற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் வந்ததை அடுத்து, காஜாமைதீன் காவல்துறைக்கு தொடர்பு கொண்டு, தான் டெல்லியில் தனியார் வங்கி கிளையில் வேலை பார்ப்பதும், அங்கு மனைவி, குழந்தைகளுடன் தங்கியிருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், குடும்பத் தகராறில் இருப்பிடம் குறித்து பெற்றோரிடம் தகவல் கூறாமல் இருந்துவிட்டதாகவும், விடுமுறையில் விரைவில் சொந்த ஊருக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கணவன் மனைவி இருவரும் பெற்றோர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு பிள்ளைகளின் குரலை கேட்ட அவர்களது பெற்றோர் ஆனந்த கண்ணீர் விட்டுள்ளனர்.


Advertisement