பெற்றோர்களே உஷார்..!! பேட் டச் செய்த சலூன் கடைக்காரரை பார்த்து அலறியடித்து ஓடிய சிறுமி..!Parents beware!! The little girl ran away screaming seeing the salon shopkeeper who had done bad touch..!

பொதுவாக இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ‘குட் டச்’, ‘பேட் டச்’ பற்றி சிறு வயதில் இருந்தே சொல்லி தர வேண்டும். ஒருவர் தன்னை பேட் டச் செய்தால் உடனே அந்த குழந்தை இது முறையற்றது என்று சொல்லி அதை தடுக்கவும் அதை வீட்டில் வந்து பெற்றோரிடம் பயமில்லாமல் தெரிவிக்கவும் பழக்கப்படுத்த வேண்டும். 

இந்நிலையில் சென்னை செனாய்நகர் பகுதியில் 9 வயது சிறுமியை அவரது பெற்றோர் அருகில் உள்ள சலூன் கடைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அந்த சிறுமி சலூன் கடை உரிமையாளரை பார்த்து பயந்து தனது தாய் பின்னால் ஒளிந்து கொண்டார். 

Parents beware

இதனையடுத்து குழந்தை வீட்டிற்கு போக வேண்டும் என்று பெற்றோரை நச்சரித்துள்ளார். இதனால் பெற்றோர் அந்த சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்றனர். இதனைதொடர்ந்து சிறுமி ஏன் அந்த சலூன் கடைக்காரரை பார்த்து பயந்து போனால் என்ற சந்தேகம் சிறுமியின் தாயாருக்கு வந்துள்ளது.

இதனையடுத்து சிறுமியின் தாய் அவரிடம் சலூன் கடைக்காரரை பார்த்து பயந்தத்தற்கான காரணத்தை மெதுவாக கேட்டுள்ளார். அப்போது சிறுமி தன் தாயிடம் அந்த சலூன் கடைக்காரர் தன்னை பேட் டச் செய்தார் என்று கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ந்துபோன பெற்றோர் உடனடியாக அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

அதன் அடிப்படையில் காவல் துறையினர் சலூன் கடைக்காரர் விஜயன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவான அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் 9வயது சிறுமிக்கு கடைக்காரர் பாலியல் சீண்டல் கொடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.