தமிழகம்

ஃபானி புயலா தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணி கூட கிடையாது- சென்னை, நார்வே வானிலை மையம்.!

Summary:

pani cyclone - no rain - tamilnadu - chennai

தமிழகத்தில் இம்மாத துவக்கத்தில் இருந்து சுட்டெரிக்கும் வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில் வங்கக்கடலில் புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் அடுத்த 36 மணி நேரத்தில் அது புயலாக வலுப்பெற்று வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழகத்தில் 30 ஆம் தேதி கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது. 

அவ்வாறு கரையை கடக்கும்போது மணிக்கு 90 முதல் 100 கி.மீ வரை காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் உருவாகியுள்ள புதிய புயலுக்கு  ஃபனி புயல் (Fani Cyclone) என்று பெயர் சூட்டப்பட்டது.

வெயிலின் கொடுமையை அனுபவித்து வந்த தமிழக மக்கள் இதனால் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபானி புயல், சென்னையை நெருங்க வாய்ப்பு குறைவு என்றும், கரையை கடக்காது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் ஒரு அதிர்ச்சியாக, தற்போது உருவாகியுள்ள புயல் ஆந்திராவை நோக்கி நகர்கிறது. வரும் ஏப்ரல் 28ம் தேதி முதல் மே 7ம் தேதி வரை சென்னைக்கு மழை பெய்யும் வாய்ப்பு இல்லை. கடந்த பருவமழை போலவே ஃபானி புயால் தமிழகத்திற்கு எந்த பயனுமில்லை என்று நார்வே வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement