சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெயிண்டர்.! தட்டி தூக்கிய போலீஸ்.!painter-torture-to-young-girl

தமிழகத்தில் சமீப காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கியபோதும் இதுதொடர்பான குற்றங்கள் குறைந்தபாடில்லை.

இந்தநிலையில், சிவகங்கையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெயிண்டரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சிவகங்கை போஸ்ரோடு பகுதியை சேர்ந்தவர் சூரியபிரகாஷ். 20 வயது நிரம்பிய இவர் பெயிண்டர் வேலை செய்து வந்துள்ளார்.

இவர் கடந்த பிப்ரவரி மாதம் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சூரிய பிரகாசை கைது செய்தனர்.