ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் தமிழ் சிறுமி பற்றிய குறும்படம்! குவிந்துவரும் பாராட்டுகள்!Oscar Award nomination tamilnadu young girl short film

மகாபலிபுரத்தை சேர்ந்த 9 வயது சிறுமி கமலி மூர்த்தி காலணிகள் கூட அணியாமல் ஸ்கேட்டிங்போர்டை பயன்படுத்தியபோது எடுத்துக்கொண்ட புகைப்படம், சர்வதேச அளவில் பிரபலமான ஸ்கேட்போர்டரான டோனி ஹாக்கின் கண்ணில் பட்டது. இதனையடுத்து அவர் அந்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டார்.

இதனால், அந்த புகைப்படம் உலக அளவில் பிரபலமானது. இந்த புகைப்படத்தை பார்த்த நியூசிலாந்தை சேர்ந்த ‌ஷஷா ரெயின்போ என்கிற இயக்குநர், தமிழகத்திற்கு வந்து கமலியை தொடர்பு கொண்டு கமலி என்கிற பெயரிலேயே 24 நிமிட குறும்படத்தை இயக்கினார்.

oscar award

அந்த குறும்படம் கடந்த மாதம் நடந்த அட்லாண்டா திரைப்பட விழாவில் சிறந்த ஆவணப் படத்திற்கான விருதை பெற்றது. 6 வாரங்களாக படமாக்கப்பட்ட அந்த குறும்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மும்பை சர்வதேச குறும்பட விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருதையும் பெற்றது.

கமலி, அவரின் தாய் சுகந்தி மற்றும் பாட்டியை பற்றிய அந்த குறும்படம் 2020-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இதனையறிந்த கமலியின் தாய், இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.