
ஸ்டாலின் சார்... நீங்கள் தான் என்னோட இன்ஸ்பிரேஷன்.! மக்களுக்கு சேவை செய்ய வேலையை உதறிய ஐ.ஏ.எஸ் அதிகாரி.!
டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் தலைமை ஆணையரான மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஜக்மோகன் சிங் ராஜு தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். அவருக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் பணி இருந்தது.
இந்தநிலையில், அவர் தமிழக முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், தமிழ்நாட்டிற்கு நீங்கள் செய்து கொண்டிருக்கும் நற்பணிகளை கண்டு வியக்கிறேன். தனது சொந்த மாநிலத்தின் வேதனை நிறைந்த சூழ்நிலைகளை தனது மனசாட்சி எடைபோடுவதாகவும், அதனால் அங்கு சென்று தங்களைப் போல வாழ்நாள் முழுவதும் மக்கள் சேவையில் தன்னை அர்ப்பணிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
விருப்ப ஓய்வு பெறுவதற்கான அவரது கோரிக்கையை பரிசீலித்த பின்னர், ஜனவரி 27 பிற்பகல் முதல் அவர் பணியிலிருந்து விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்ப ஓய்வு பெற்ற நாளிலேயே, பஞ்சாப் சட்டமன்ற தேர்தலுக்கான பாஜகவின் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டுள்ளார். அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் அவர் போட்டியிடுவார் என பாஜக அறிக்கை வெளியிட்டுள்ளது. இதேதொகுதியில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து ஏற்கெனவே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement