அரசியல் தமிழகம்

அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலில் பணியாற்ற வேண்டும்.! ஓபிஎஸ், இபிஎஸ் வேண்டுகோள்.!

Summary:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்த

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் வரும் 2021 சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. 

இந்தநிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வேட்பாளர் நேர்காணல் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் நேர்காணல் நடைபெற்றுவருகிறது.

அதிமுக சார்பில் விருப்ப மனு அளித்த 8,240 பேருக்கும் இன்று ஒரே நாளில் நேர்காணல் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம், வெற்றி பெறுவது மட்டுமே நம் இலக்கு என தெரிவித்தார்.

இதனையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், விருப்பமனு அளித்தவர்கள் தங்களை வேட்பாளர்களாக நினைத்து தேர்தல் பணியாற்ற வேண்டும், கட்சித் தலைமை அறிவிக்கும் வேட்பாளரை ஒருமித்த கருத்தோடு ஆதரித்து முழுமனதோடு வெற்றி பெற செய்ய வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலில் பணியாற்ற வேண்டும் என தெரிவித்தார்.


Advertisement