அரசியல் தமிழகம் ஆன்மிகம்

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு அரசியல் தலைவர்கள் மரியாதை.!

Summary:

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் திருஉருவ சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இன்று தேசியமும் தெய்வீகமும் எனது இருகண்கள் என வாழ்ந்த தெய்வதிருமகன் முத்துராமலிங்கத் தேவரின் 113வது ஜெயந்தி விழா மற்றும் 58வது குரு பூஜை இன்று (அக்டோபர் 30) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேவுள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. 

இந்தநிலையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி   விழாவின்போது ஆண்டு தோறும்  நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மதுரை  கோரிப்பாளையம் தேவா் சிலைக்கு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்துவது வழக்கம்.


இந்தநிலையில், மதுரை கோரிப்பாளையத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை நடைபெற்று வருகிறது. இதனையடுத்து கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ,   துணை  முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள்   மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


Advertisement