என்னது! கம்ப்யூட்டர், லேப்டாப் வாங்கினால் இது இலவசமா? வித்தியாசமான அறிவிப்பு! வாயடைத்துப்போன மக்கள்!

என்னது! கம்ப்யூட்டர், லேப்டாப் வாங்கினால் இது இலவசமா? வித்தியாசமான அறிவிப்பு! வாயடைத்துப்போன மக்கள்!


onion-free-for-buying-computer-laptop

வெங்காய சாகுபடி அதிகமுள்ள மாநிலங்களில் பருவம் தவறிய மழையால் வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் விண்ணை முட்டி உயர்ந்தவண்ணம் உள்ளது. 

இதனால், நாடு முழுவதும் வெங்காயத்திற்கு மாபெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது வெங்காயத்தின் விலை கிலோ 180 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பெருமளவில் அல்லோலப்பட்டு வருகின்றனர். மேலும் வெங்காய விலைவுயர்வால் சிறுவணிகர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பல உணவகங்களும் மாபெரும் பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில் பலஇடங்களில் மர்மநபர்கள் சிலர் வெங்காய மூட்டைகளை திருடி செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது. 

computer shop

அதனை தொடர்ந்து தற்போது வெங்காயத்தின் விலையே  அனைவராலும் பேசப்படும் ஒன்றாக உள்ளது. இந்நிலையில் கடலூரில் அமைந்துள்ள கணிணி விற்பனை கடையில் வித்தியாசமான புதிய விளம்பரம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்  வாங்கினால் ஒன்றரை கிலோ வெங்காயம் இலவசமாக வழங்கப்படும் என விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விளம்பர பலகை புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.