கடலூரில் பயங்கரம்.! போலீஸ் மீது தாக்குதல்.! என்கவுன்ட்டரில் ஒருவர் சுட்டுக்கொலை!

கடலூரில் பயங்கரம்.! போலீஸ் மீது தாக்குதல்.! என்கவுன்ட்டரில் ஒருவர் சுட்டுக்கொலை!


one-person-encounter-in-cuddalore

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே புதுப்பேட்டை மலட்டாறு என்ற பகுதியில் வீரா என்ற நபர் நேற்று முன்தினம் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வீராவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து போலீசார், தனிப்படை அமைத்து இந்த கொலைக்கு காரணமானவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் புதுப்பேட்டை மலட்டாறு பகுதியில் குற்றவாளிகள் 7 பேர் சுற்றி வளைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் கிருஷ்ணா என்பவர் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அதனால் அவரை போலீசார் என்கவுண்டர் செய்ததாகவும் கூறப்படுகிறது.

Encounterஇந்த தாக்குதலில் போலீசார் ஒருவர் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த என்கவுண்டர் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணாவிற்கும், வீராவிற்கும் ஏற்கெனவே முன்பகை இருந்ததாகவும் அதனால்தான் இந்த கொலை நடந்ததாகவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.