நெல்லை To மலேசியா: 55 ஆண்டுகள் கழித்து தந்தையின் கல்லறையை தேடி கண்டுபிடித்த நபர்...

நெல்லை To மலேசியா: 55 ஆண்டுகள் கழித்து தந்தையின் கல்லறையை தேடி கண்டுபிடித்த நபர்...


One man after-55-years-in-search-of-his-fathers-grave

தென்காசி மாவட்டம் வெங்கடாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பூங்குன்றன் (எ) ராம சுந்தரம் - ராதா பாய் தம்பதியினர். இவர்களுக்கு திருமாறன் என்ற மகன் உள்ளார். ராமசுந்தரம் மலேசியாவில் ஆசிரியராக பணியாற்றி வந்த நிலையில் திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக மலேசியாவிலேயே உயிரிழந்தார்.

ராமசுந்தரம் இறக்கும் போது திருமாறன் 6 மாத கைக்குழந்தையாக இருந்த காரணத்தால் ராதா பாய் கணவரின் உடலை மலேசியாவிலேயே அடக்கம் செய்து விட்டு மகனை அழைத்து கொண்டு சொந்த ஊர் திரும்பியுள்ளார். பின்னர் சிறிது நாட்களிலேயே ராதாபாயும் உயிரிழந்துள்ளார்.

அதன்பின் அனாதையான திருமாறன் சமூக பணிகளில் ஆர்வம் கொண்டு அனாதை ஆசிரமம் ஒன்றை நடத்தி அதனை பராமரித்து வந்துள்ளார். இருப்பினும் அடிக்கடி திருமாறனுக்கு தனது தந்தையின் நினைவு வந்துள்ளது. அறியாபருவத்தில் இறந்த தந்தையின் கல்லறைக்கு ஒரு முறையாவது மரியாதை செலுத்த எண்ணியுள்ளார் திருமாறன்.

இதனையடுத்து மலேசியாவில் அவரது குடும்பத்தினர் தங்கிருந்த இடத்தை கூகுளில் தேடி கண்டுபிடித்துள்ளார். பின்னர் அங்கு சென்று சிலரின் உதவியுடன் புதரில் இருந்த தந்தையின் கல்லறையில் தந்தையின் பிறப்பு, இறப்பு பற்றிய விபரங்கள் இருந்ததை பார்த்து கண்ணீர் விட்டார். அதன் பின்னர் அந்த கல்லறை முன்பிருந்து புகைப்படம் எடுத்து கொண்டு தந்தையின் கல்லறைக்கு மரியாதை செலுத்தி விட்டு தாயாகம் திரும்பியுள்ளார். இந்நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.