
Summary:
Omni bus fire in Chennai airport
சென்னை விமான நிலையத்தில் பயணிகளை ஏற்ற வந்த தனியார் ஆம்னி பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததில் விமான நிலையத்தில் சிறிது நேரம் பதட்டம் நிலவியது.
விமான நிலையத்தில் விமானத்திற்கு செல்லும் மற்றும் விமானத்திலிருந்து வரும் பயணிகளை ஏற்றுவதற்காக பல தனியார் ஆம்னி பேருந்துகள் பயன்படுத்துவது வழக்கம். இந்த பேருந்துகள் விமான நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்படும்.
அவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்து ஒன்று இன்று திடீரென தீப்பற்றி எரிய துவங்கியது. பின்னர் தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. பேருந்தின் மேற்கூறையில் இருந்த ஏசியில் ஏற்பட்ட தீப்பொறியே இதற்கு காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement