BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
அட பாவி மனுஷா பச்சிளம் பிஞ்சுடா... பாத்ரூமில் இருந்து வந்த 3 வயது பெண் குழந்தையின் அழுகை சத்தம்.! பெற்றோர் கண்ட பேரதிர்ச்சி.!
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சமீப காலமாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்துவருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் பரமக்குடியில் 3 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பரமக்குடியை சேர்ந்த ஒருவர் சமையல் மாஸ்டராக உள்ளார். அவர் மண்டபம் ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சமையல் ஆர்டர் எடுத்து குடும்பத்துடன் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுடன் அவர்களது 3 வயது பெண் குழந்தையும் இருந்துள்ளது. அந்த குழந்தை அங்குமிங்குமாக சென்று விளையாடிக் கொண்டிருந்தது.
இந்தநிலையில் திடீரென அந்த குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. உடனே அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை தேடினர். அப்போது பாத்ரூமில் இருந்து அழுகை சத்தம் வந்தது. அங்கு சென்று பார்த்தபோது ஆசாமி ஒருவர் அந்த குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தையை மீட்டனர்.
பின்னர் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த அந்த கொடூரனை பிடித்து வைத்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவனை பிடித்து விசாரணை நடத்தியதில் அவன் பெயர் ரவீந்திரன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து 50 வயது நிரம்பிய ரவீந்திரனை கைது செய்தனர்.