சரக்குகளுடன் மிடுக்காக வந்த முதியவர் கைது.!

சரக்குகளுடன் மிடுக்காக வந்த முதியவர் கைது.!



oldman arrested in erode

ரோடு மாவட்ட சென்னிமலை பகுதியில் கண்காணிப்பதற்காக சப்- இன்ஸ்பெக்டர் பிரியா ரோந்து சென்றுள்ளார். அங்கு சந்தேகம் படும்படி ஒரு நம்பர் சென்றுள்ளார். சப்- இன்ஸ்பெக்டர் பிரியா அந்த நபரை பிடித்து விசாரணை செய்துள்ளார். 

அப்போது, அந்த நபர் 30 சரக்கு பாட்டில்களுடன் கூலாக நடந்து சென்றிருப்பது தெரியவந்துள்ளது. அந்த மது பாட்டில்கள் அனைத்தும் அரசு அனுமதியின்றி ப்ளாக்கில் விற்பனை செய்ய வைத்திருப்பதாக தெரிகிறது. 

மேலும், அந்த நபர் குறித்து விசாரித்ததில், அவர் சென்னிமலை பகுதியில் உள்ள சிதம்பரம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் என்றும் அவர் பெயர் நாகராஜ், வயது 58 என்றும் , அவர் கூலி வேலை செய்பவர் என்பதும் தெரியவந்துள்ளது.  பின்னர், அந்த நபரை உடனடியாக கைது செய்து, அவர் மீது வழக்கும் பதிவு செய்துள்ளார்.

மது பாட்டிலை அனுமதியின்றி விற்பனை செய்வதற்காக எடுத்து சென்றது தவறுதான் என்றபோதிலும், அதை அரசு விற்றால் தவறில்லை என்பதில் என்ன நியாயம் இருக்கிறதோ? "மது அருந்தினால் உடல் நலத்திற்கு கேடு" என்ற வாசகத்துடன் தான் மது விற்பனையும் அமோகமாக நடந்து வரும் அவலம் ஏற்பட்டு வருகிறது.