தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
நீ எனக்கு புத்திமதி சொல்லாதே உன் வேலையை பாரு... அண்ணனை கடிந்து கொண்ட தங்கை... ஆத்திரத்தில் தங்கையை அரிவாளால் வெட்டி கொன்ற அண்ணன்...
தேனி மாவட்டம் கூடலூர் அடுத்த கருநாக்கமுத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் விமல் - செல்ல பிரியா தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ள நிலையில் விமல் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கஞ்சா வழக்கில் கைதாகி கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தான் விடுதலை ஆகியுள்ளார். விடுதலைக்கு பின்னர் மனைவி செல்லபிரியாவுடன் வசித்து வந்துள்ளார் விமல்.
இந்நிலையில் திடீரென நேற்று முன்தினம் இரவு செல்லபிரியா மற்றும் விமல் தம்பதியினருக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த விமல் செல்லபிரியாவை செருப்பால் அடித்து விட்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அதனையடுத்து செல்லபிரியாவின் அண்ணன் செல்ல பாண்டி, விமல் வீட்டிற்கு வந்து தங்கைக்கு அறிவுரை கூறியுள்ளார்.
அதற்கு செல்லபிரியா நீ உன் வேலையை பாரு, நீ ஒன்னும் எனக்கு புத்திமதி சொல்ல தேவையில்லை என்று கூறி விட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்ல பாண்டி தங்கை என்று கூட பாராமல் அரிவாளால் செல்ல பிரியாவின் கழுத்தில் வெட்டி விட்டு அங்கிருந்து விமல் மற்றும் செல்ல பாண்டி தப்பி ஓடியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்லப்பிரியாவை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். அங்கு செல்லப்பிரியா உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தப்பி ஓடிய செல்லப்பாண்டி அவருக்கு உடந்தையாக இருந்த விமல் இரண்டு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.