அதிர்ச்சி சம்பவம்.. சொத்து தகராறில் மூதாட்டி எரித்துக்கொலை.!

அதிர்ச்சி சம்பவம்.. சொத்து தகராறில் மூதாட்டி எரித்துக்கொலை.!


Old women killed for assets

ராமநாதபுரம் அருகே சொத்து தகராறில் மூதாட்டி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே அழகமடை சேர்ந்தவர்கள் சித்திரவேலு, ராசு. உறவினர்களான இவர்களுக்கு இடையே பல ஆண்டுகளாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.

ramanathapuram

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ராசுவின் அம்மா பாபு வீட்டில் முன்பு கட்டிலிலும், அவரது மகன் ராசு மற்றும் மருமகள் இருவரும் வீட்டில் உள்ளே தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென பாப்புவின் அலறல் சத்தம் கேட்டு வெளியே ஓடிவந்து பார்த்தபோது கட்டிலில் படுத்திருந்த பாப்பு மீது தீ வைத்தில் அலறி துடித்துள்ளார். இதில் சொத்து பிரச்சினை காரணமாக சித்திரவேலு மூதாட்டிக்கு தீ வைத்துவிட்டு தப்பியோடியுள்ளார்.

ramanathapuram

இதில் பலத்த காயமடைந்த மூதாட்டி பாபுவை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.