திறந்திருந்த வீட்டிற்குள் புகுந்த அண்டை வீட்டு நபர்.! பேரனுக்கு காத்திருந்த அதிர்ச்சி மூதாட்டிக்கு நேர்ந்த பரிதாபம்.!

திறந்திருந்த வீட்டிற்குள் புகுந்த அண்டை வீட்டு நபர்.! பேரனுக்கு காத்திருந்த அதிர்ச்சி மூதாட்டிக்கு நேர்ந்த பரிதாபம்.!


Old woman killed jewelry near by theni

தேனி மாவட்டம் கம்பம் சுருளிப்பட்டி சாலையில் வசித்து வருபவர் மணிமுத்து என்பவரின் மனைவி ராமுத்தாய் வயது 88 இவர் தன்னுடைய மகன் வழி பேரனான போத்தி ராஜா என்பவரோடு வசித்து வந்தார். இந்நிலையில்தான், பாட்டியின் வீட்டில் மின் இணைப்பு பழுது ஏற்பட்டதால், போத்தி ராஜா அதனை சரி செய்து விட்டு வேலைக்காக வெளியே சென்று விட்டார்.

Theni

பின்னர் பாட்டியின் வீடு திறந்து கிடந்ததை கவனித்த அண்டை வீட்டுக்காரரான மணிகண்டன் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கே பாட்டி ராமுத்தாய் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக இதுகுறித்து அவர் போத்தி ராஜாவிடம் தெரிவித்துள்ளார்.

இதனால், பதற்றமான போத்தி ராஜா உடனடியாக வீட்டிற்கு சென்று பார்த்த போது, தன்னுடைய பாட்டி ராமுத்தாய் ரத்த காயங்களோடு கொலை செய்யப்பட்டு கிடந்திருக்கிறார்,  வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தது. மேலும் ராமுத்தாய் அணிந்திருந்த தங்க நகையும் காணாமல் போயிருந்தது.

Theni

இந்த விவகாரம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்து மூதாட்டியை அடித்து கொலை செய்த மர்ம நபர்களை மிக தீவிரமாக காவல்துறை தேடி வருகிறது.