3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர்! அதிர்ச்சியடைந்த பெற்றோர்!

3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர்! அதிர்ச்சியடைந்த பெற்றோர்!


old-man-try-to-abuse-young-girl

தமிழகத்தில் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடிவரும் நிலையில், சமீப காலமாக சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு கொடுமைபட்டுவரும் கொடிய சம்பவமும் நடந்து வருகிறது. சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த ஏம்பலில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், சிதம்பரம் அருகே 3 வயது சிறுமி பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வீரன் என்ற முதியவர் அதே ஊரைச் சேர்ந்த 3 வயது சிறுமியிடம் பாலியல் சீன்டல் செய்ததாகக் கூறப்படுகிறது. 

old man

இதுகுறித்து சிறுமி அவரின் பெற்றோர்களிடம் கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த முதியவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.