ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர்.! தர்ம அடி கொடுத்த பயணிகள்.!old man torured to Professor

சென்னையை சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியை, கோவையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து கோவையில் இருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் ரயிலில் காட்பாடி அருகே சென்றபோது அருகே அமர்ந்து பயணம் செய்த முதியவர் அந்த பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால், அதிர்ச்சி அடைந்த பேராசிரியை அலறல் சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து அருகில் இருந்த சக பயணிகள் அந்த முதியவரை பிடித்து சரமாரியாக வெளுத்து வாங்கியுள்ளனர். இதனையடுத்து அருகில் ரயில் நிலையம் வந்ததும் ரயில்வே போலீசாரிடம் அந்த முதியவரை ஒப்படைத்தனர். 

torture

போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கோவை ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் (61) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து வேலுார் மத்திய சிறையில் அடைத்தனர். ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு முதியவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.