திருமணமான பெண் மீது தீராத காதல் கொண்ட 65 வயது முதியவர்.! முதியவரின் செயலால் பரிதவிக்கும் பெண்.!

சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்த 35 வயது நிரம்பிய பெண்ணின் கணவருக்கு கை உடைந்து வீட்டில் ஓ


old man love torture to young women

சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்த 35 வயது நிரம்பிய பெண்ணின் கணவருக்கு கை உடைந்து வீட்டில் ஓய்வு எடுத்து வருவதால் வருமானமின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வந்துள்ளது அவர்களது குடும்பம். இதனால் அவர்களது குடும்பத்தை காப்பாற்ற அந்த பெண் அவர் வசிக்கும் வீட்டின் அருகே கடந்த இரண்டு மாதங்களாக காய்கறி, பழங்கள் வாங்கி வந்து விற்பனை செய்து வந்துள்ளார்.

இந்தநிலையில், அந்த பெண் விற்கும் காய்கறி, பழங்களை வாங்க தினந்தோறும் சென்னை கிண்டியை சேர்ந்த 65-வயதுடைய முருகன் என்பவர் சென்றுள்ளார். இந்தநிலையில் அந்த முதியவர் திடீரென அந்த பெண்ணை காதலிப்பதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் வயதான முருகனுக்கு பயந்து காய்கறி, பழக்கடை போடுவதையே இரண்டு வாரங்களாக நிறுத்தியுள்ளார்.

இந்தநிலையில் அந்த முதியவர் அந்த பெண்ணின் வீட்டிற்கே சென்றுள்ளார். ஆனால் அந்த பெண் வீட்டில் இல்லை என்பது தெரியவந்தது. இதனால் கடும் விரக்தியடைந்த முருகன் ஆத்திரத்தில் கவிதா வசிக்கும் வாடகை வீட்டிற்கு தீ வைத்து எரித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அந்த பெண்ணிற்கு தொடர்பு கொண்டு உங்களது எரிந்து கொண்டிருப்பதாக தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு அந்த பெண் வருவதற்குள் வீடு முழுவதும் எரிந்துள்ளது. இதனையடுத்து அந்த பெண் கொடுத்த புகாரின்பேரில் வயதான முருகனை போலீசார் கைது செய்துள்ளனர்.