தமிழகம்

சிறுமியை வீட்டில் விட்டு கடைக்கு சென்ற தாய்! 53 வயது முதியவரின் கொடூர சில்மிஷம்!

Summary:

old man abused young girl

பொள்ளாச்சி அருகேயுள்ள தனியார் பள்ளியில் வாகன ஓட்டுநராக பணியாற்றுபவர் பொன்னுசாமி. இவரின் வயது 53. இவர், வீட்டில் தனியாக இருந்த, 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த சிறுமிக்கு தாத்தா முறை என்பதால் பொன்னுச்சாமி அவரது வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று சிறுமியின் தாய் கடைக்கு செல்வதற்காக வெளியில் சென்றுள்ளார். வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருப்பதை அறிந்த பொன்னுச்சாமி, சிறுமியின் வீட்டிற்கு சென்று அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அலறல் சத்தம் போட்டுள்ளார். 

அந்த சமயத்தில் வெளியில் சென்ற தாயும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். வீட்டிற்கு வந்த தாயிடம் அழுதபடி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அவர் அளித்த புகாரின் பேரில் பொன்னுச்சாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இதனையறிந்த பொன்னுசாமி வெளியூர் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர். 


Advertisement