"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
எம்.எல்.ஏ, அமைச்சர்கள், தொழிலதிபர் என 30 பேரின் அந்தரங்க வீடியோ; சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட இளம்பெண் பகீர் செயல்..!
அரசியல் பிரமுகர்களை வளைத்துப்போட்டு இளம்பெண் செய்த காரியம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் உள்ள களஹண்டி மாவட்டம், ஏழைக்குடும்பத்தை சேர்ந்த பெண்மணி அர்ச்சனா நாக். இவர் சொகுசு கார், உயர்ரக நாய்கள், வெள்ளை குதிரையோடு ஆடம்பர அரண்மனையை வைத்துள்ளார். இவர் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.30 கோடி பணம் குவித்து இருக்கிறார்.
இவர் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அம்மாநிலத்தில் பிரபலமாக இருக்கும் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் என பலரையும் குறிவைத்து நெருங்கி பழகி இருக்கிறார். இவர்களுடன் தனிமையில் அர்ச்சனா இருக்கும்போது, அதனை வீடியோ எடுத்து வைத்துள்ளார்.
இந்த விடியோவை வைத்து ஒவ்வொரு அரசியல்வாதியிடமும் குறிப்பிட்ட தொகை என மொத்தமாக 4 ஆண்டுகளில் ரூ.4 கோடி வரை வசூல் செய்துள்ளார். அர்ச்சனா நாக்கின் கணவர் ஜெகபந்து பழைய கார்களை விற்பனை செய்து வரும் ஷோ ரூம் நடத்துகிறார்.
இதனால் பல அரசியல் கட்சியினரும் அவருக்கு பழக்கமான நிலையில், தனது மனைவியை வைத்து பெண்களை சப்ளை செய்து வீடியோ எடுத்துள்ளார். பின்னர், இந்த வீடீயோவை வைத்து அவரின் வலையில் சிக்கிய பிரமுகர்களை மிரட்டி பணம் பறித்துள்ளனர்.
இவர்களிடம் இருந்து 4 செல்போன்கள், 2 லேப்டாப்கள், பெண்டிரைவ் உட்பட பல பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றினர். அர்ச்சனாவின் பிடியில் 18 எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் உட்பட 25 அரசியல்வாதிகள், 5 தொழிலதிபர்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.