தமிழகத்தில் கெத்து காட்டிய நாம் தமிழர் கட்சி..! மாற்றம்., முன்னேற்றம்.! நடந்தது என்ன.?

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. கன்னிய


NTK third place in tamilnadu

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தமிழகத்தில் இதுவரை எண்ணப்பட்ட முடிவுகளின்படி திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. 

வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பான கட்டத்தை எட்டிவரும் வேளையில், தி.மு.க - அ.தி.மு.க என முன்னணி கட்சிகளுக்கு அடுத்து பெரும்பான்மையான இடங்களில் 3 வது இடத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வாக்குகள் பெற்றிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துவருகிறது.  

NTKதமிழகத்தில் இதுவரை இல்லாமல் சட்டமன்ற தேர்தலில் இம்முறை 5 முனை போட்டி நிலவுகிறது. இந்த தேத்தலில் குறிப்பாக இளம் வாக்காளர்களின் வாக்குகள் நாம் தமிழர் கட்சி பக்கமே இருந்துள்ளது என்று கூறலாம். அது இந்த வாக்கு எண்ணிக்கையில் எதிரொலிப்பதை பார்க்க முடிகிறது. அதன்படி, 234 தொகுதிகளில் ஒரு இடத்திலும் நாம் தமிழர் கட்சி முன்னிலை வகிக்கவில்லை என்றாலும்கூட பெருவாரியான தொகுதிகளில் அதிமுக - திமுகவுக்கு அடுத்து அதிக வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது.

தற்போது வரை எண்ணப்பட்ட வாக்கு எண்ணிக்கையில், நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடத்தில் இருக்கிறது. திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட சீமான் அங்கு கணிசமான வாக்குகளை பெறவில்லை என்றாலும் இந்த வாக்கு சதவீதம் நாம் தமிழர் கட்சிக்கு பெரும் மகிழ்ச்சையை கொடுத்திருப்பதாக தெரிகிறது. ஆனாலும் முழுமையான வாக்கு சதவிகிதம் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு தான் தெரிய வரும்.