மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
வீச்சரிவாள், கருப்பணசாமி ஆட்டத்துடன் நாம் தமிழர் வேட்பாளர் வேட்பு மனு.!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு அரசியல் களம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. வரும் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக, அமமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் எனப் பல முனை போட்டி நிலவுகிறது. அனைத்து காட்சியிலும் கூட்டணி பேச்சுவார்த்தை முடிவுற்ற நிலையில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 12-ம் தேதி முதல் தொடங்கியது. இந்தநிலையில் முக்கிய வேட்பாளர்கள் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக- காங்கிரஸ் இடையே நேரடி போட்டி உள்ளது. அந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் துரைமாணிக்கம் என்பவர் போட்டியிடுகிறார்.
இவர் நேற்று தனது ஆதரவாளர்களுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது வேட்பாளர் துரைமாணிக்கம் மாட்டு வண்டியில் பனியன், துண்டு, வேட்டி அணிந்து கொண்டு விவசாயி போன்று வந்தார். அவருடன் சென்ற ஆதரவாளர்கள் அனைவரும் கையில் கரும்பு வைத்திருந்தனர்.
அப்போது வேட்பாளர் சென்ற மாட்டு வண்டிக்கு முன்பாக ஆதரவாளர் ஒருவர் கையில் நீண்ட அரிவாள் ஏந்தி கருப்பணசாமி வேடமணிந்து சாமியாடியவாறு சென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.