கொரோனா அச்சுறுத்தல்: வெறிச்சோடி காணப்படும் திருச்சி விமான நிலையம்!

கொரோனா அச்சுறுத்தல்: வெறிச்சோடி காணப்படும் திருச்சி விமான நிலையம்!



no crowd in trichy airport

சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தற்போது வரை 7 பேர் இந்தியாவில் கொரோனாவால் உயிர் இழந்துள்ள நிலையில் 300 கும் அதிகமானோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பல்லாயிரக்கணக்கானோா் இறந்துவிட்ட நிலையில் அந்தந்த நாடுகள் மேலும் வைரஸ் தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

trichy

இந்தநிலையில் தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று மேலும் பரவாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகின் பல நாடுகளில் விமான சேவை ரத்து செய்ப்பட்டுள்ளது.

இந்தநிலையில், திருச்சியில் கடந்த ஒரு வாரமாகவே விமான நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சிங்கப்பூர், மலேசியாவிற்கு செல்வதற்கு தினந்தோறும் மக்கள் வந்து செல்வது வழக்கம். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போது திருச்சி விமான நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.