தமிழகம்

ஆஹா..! ஆண்டி என்றாலும் ஓகே தான்.. அதிபர் என்றாலும் ஓகே தான்..! வீடியோ வெளியிட்டு வைரலாக்கிவரும் நித்தியானந்த.!

Summary:

Nithiyanandha stars new wikipediya in his name

தன்னை ஆண்டி என்றாலும் ஓகே தான்.. அதிபர் என்றாலும் ஓகே தான்.. என கூறி நித்தியானந்தா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

தனது சிறுவயதில்லையே ஆன்மீகத்தில் இறங்கி உலகம் முழுவதும் பிரபலமானவர் நித்தியானந்தா. புகழின் உச்சத்தில் இருந்த இவர் பிரபல நடிகை ஒருவருடன் படுக்கை அறையில் உல்லாசமாக இருந்த வீடியோ காட்சிகள் வெளியாகி இவரது பெயரையும், புகழையும் ஒரே நாளில் கெடுத்தது. அன்றில் இருந்தே இவர் மீது பல்வேறு குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டுவருகிறது.

ஆட்கடத்தல், கொலை வழக்கு, பாலியல் புகார் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய இவர் தற்போது இந்தியாவில் இருந்து தலைமறைவாகி கைலாசா என்ற நாட்டை உருவாக்கி வருகிறார். கைலாசா நாட்டிற்காக தனி கரன்சி, ரிசர்வ் பேங்க் ஆப் கைலாசா என அடுத்தடுத்த பல்வேறு அறிவுப்புக்களை வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்திவருகிறார் நித்தியானந்தா.

இந்நிலையில் விக்கிபீடியா போல தன்னை பற்றி அறிந்து கொள்ள நித்யானந்தாபீடியா என்ற ஒன்றை உருவாக்கி உள்ளாராம் நித்தியானந்தா. அதில், "தன்னை ஆண்டி என்றாலும் ஓகே தான்.. அதிபர் என்றாலும் ஓகே தான்" என்ற ஒரு வார்த்தைணுயை சொல்லி உள்ளார். இந்த வார்த்தை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.


Advertisement