தமிழகம்

தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நாளை முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி..!

Summary:

Newly role allocated by the government in corona

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தேவையில்லாமல் வெளியே வருபவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும் என அறிவித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது புதிதாக மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த ஞாயிறு மதியம் 1 மணி வரை மட்டுமே கடைகளை திறந்திருக்க வேண்டும் என்ற அதிரடி அறிவிப்பை தமிழக அரசு விடுத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸானது அதிக அளவில் பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்து வருகிறது.

இந்நிலையில் இதற்கு முன்பு அத்தியாவசிய பொருட்களின் கடைகளை திறக்க காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்த நிலையில் தற்போது புதிதாக புதிய அறிவிப்பாக நாளை முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 


Advertisement