திருமணமாகி நான்கே மாதத்தில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்!. அதிர்ச்சியில் மூழ்கிய கிராமம்!

திருமணமாகி நான்கே மாதத்தில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்!. அதிர்ச்சியில் மூழ்கிய கிராமம்!


newly married women dead in.

திருநெல்வேலி மாவட்டம் வண்ணார்பேட்டை கம்பர் ராமானுஜர் தெருவில் வசித்து வருபவர் முத்துக்குமார், இவர் காவல்துறையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த ஜெயசித்ரா என்கிற பெண்ணுக்கும் கடந்த  நான்கு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. 

இந்தநிலையில், இவர்கள் இருவரும் தங்கள் குடும்பத்துடன் சேர்ந்து வசித்து வந்துள்ளனர். ஜெயசித்ராவின் கணவர் முத்துக்குமார்  தேர்தல் பணிக்காக வெளியில் சென்றிருந்த நேரத்தில், குடும்பத்தினரிடையே  பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 

suicide

அன்று இரவு தூங்கச் சென்ற முத்துக்குமாரின் மனைவி ஜெயசித்ரா அதிகாலையில் வெகுநேரமாகியும் எழுந்திருக்காத காரணத்தினால் உறவினர்கள் கதவை திறந்து பார்த்தனர். அப்போது ஜெயசித்ரா அந்த அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து போலீஸார் இதுதொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில், ஜெயசித்ராவின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அப்பகுதி மக்கள்  ஜெயசித்ராவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறிவருகின்றனர்.