நான் வந்துட்டேன்.. பிறந்தவுடனே குழந்தை பேசியதா.! என்ன நடந்தது? ஆச்சரியத்தில் மூழ்கிய காஞ்சிபுரம்.!!

நான் வந்துட்டேன்.. பிறந்தவுடனே குழந்தை பேசியதா.! என்ன நடந்தது? ஆச்சரியத்தில் மூழ்கிய காஞ்சிபுரம்.!!



newborn-baby-speak-in-kanchipuram-news-viral

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே களியாம்பட்டி பூண்டி என்ற கிராமத்தில் பிறந்த ஆண் குழந்தை பேசியதாக பரவிவரும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகாவை சேர்ந்த சின்ன அழிசூர் கிராமத்தில் வசித்து வருபவர் சந்திரன். அவரது மனைவி ரேவதி. அவர்கள் கூலி வேலை பார்த்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு இரு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

மேலும் ரேவதி இரண்டாவது முறையாக கர்ப்பம் அடைந்திருந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் அவரை குடும்பத்தினர் அருகில் உள்ள களியாம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்துள்ளனர். அங்கு பணியில் இருந்த மருத்துவர் சரண்ராஜ், செவிலியர் பிருந்தா ஆகியோர் பிரசவத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு காலை 10.15 மணிக்கு ரேவதிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது

born baby

சுயபிரசவத்தில் பிறந்த இக்குழந்தை பிறந்தவுடனே "நான் வெளியே வந்துட்டேன்" என பேசியதாக கூறப்படுகிறது. மேலும் இந்தக் குரலை செவிலியர்கள், தூய்மை பணியாளர், குழந்தையின் தாய் ஆகியோர் கேட்டுள்ளனராம். இந்நிலையில் பிரசவ அறைக்கு அருகே வேறு யாரேனும் உள்ளார்களா? அவர்கள்தான் பேசினார்களா என தேடிப் பார்த்தால் அங்கு யாருமே இல்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதுகுறித்த செய்தி தீயாய் பரவிய நிலையில் பலரும் ஆச்சரியமடைந்து அந்த குழந்தையை பார்த்து செல்கின்றனராம். மேலும் இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், குழந்தை பிறந்தவுடன் அழும். ஆனால் பேசி எங்கேயும் பார்த்தது கிடையாது. இது நம்ப முடியவில்லை என கூறியுள்ளனர்.